ஜெயங்கொண்டம் பகுதியில் 20 வருடங்களுக்கு முன்னர் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக பொதுமக்களிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த 20 வருடங்களில் எந்தவிதமான திட்டமும் இல்லை. தகுந்த இழப்பீட்டுத் தொகையும் தற்போது வரை வழங்கப் படவில்லை.
கடந்த இருபது வருடங்களில் 2011 தேர்தலைத் தவிர்த்து மற்ற தேர்தல்களில் அதிமுகவே இந்தத் தொகுதிகளில் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள். இந்நிலையில் நடைபெற இருக்கிற மக்களவைத் தேர்தலை இந்த ஊர் மக்கள் புறக்கணிப்பதற்காக மக்கள் சபைக் கூட்டத்தை கூட்டியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.