சமீபத்தில் வெளியான ஜெயம் ரவியின் அடங்கமறு படம் புதுமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் வெளியானது. ஜெயம்ரவி எப்போதும் எடுக்கும் சாயலில் தான் இந்தப் படம் அவருக்கு அமைந்துள்ளது.
அடங்க மறு படத்திக்கு பின், ஜெயம் ரவி புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனை,வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ‘ஐசரி கே’ கணேஷ் தயாரிக்கவிருக்கிறார். ஜெயம் ரவியின் 24வது படமாக உருவாகவுள்ளது.
இப்படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கவுள்ளார். முன்னதாக மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’ படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த தனி ஒருவன் பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது போல இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடியுள்ளது .