Mnadu News

“ஜெயிலர்”எப்படி இருக்கு! களத்தில் சூப்பர் ஸ்டார் வென்றாரா?

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்து முடித்துள்ள படம் “ஜெயிலர்”. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, தமன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இதனிடையே ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய “ஜெயிலர்” படத்தின் படப்பிடிப்பு 2023 ஜூன் மாதம் நிறைவடைந்தது. அதன் பின்னர் ஒவ்வொரு அப்டேட்டாக  படக்குழு வெளியிட்டு வந்தது. ஜூலை 6 ஆம் தேதி “காவாலா” பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் மாஸ் ஹிட் அடித்தது. இதன் பின்னர் யாரும் எதிர்பாராத ரஜினி மாஸ்ஸை உணர்த்தும் பாடல் போல் வெளியானது “ஹுகும்”. இப்பாடல் பெரும் சர்ச்சைக்கு மத்தியில் பெரும் வரவேறப்பை பெற்று உள்ளது.

இதற்க்குள் அடுத்த பாடலான “ஜுஜுபி” படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பை கூட்டி இருந்தது. ஜூலை 28 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் “ஜெயிலர்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது வெளியாகி “ஜெயிலர்” பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.

கதையின்படி, காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் அமைதியாக ரஜினி குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சிலை கடத்தல் கும்பலை பிடிக்க களமிறங்கும் மகன் அவர்களால் கடத்தப்படுகிறார். மகனை தந்தை எப்படி மீட்டர், எதையெல்லாம் எதிர்கொண்டார் என்பதை பாடல், நச் வசனங்கள், காமெடி, ஆக்ஷன் என கமர்ஷியல் மசாலா படமாக கொடுத்து அசத்தி உள்ளார் நெல்சன்.

முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சுமார் 50 கோடிகள் வரை உலகமெங்கும் வசூல் செய்துள்ளது இப்படம், மேலும், இந்த வசூல் உயரும் என்றும் நிச்சயம் சன் பிக்சர்ஸ் வசூலை அள்ள போவது உறுதி என திரை அரங்க வட்டாரங்கள் கணித்துள்ளன. ஆம், சுமார் 300 கோடிகளையாவது “ஜெயிலர்” அள்ளும் என்பது திண்ணமே.

Share this post with your friends