Mnadu News

ஜெயிலர் படக்குழு வெளியிட்ட மாஸ் புரோமோ! 

ஜெயிலர் டீம்: 

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இப்படத்தில் தலைவர் முத்துவேல் பாண்டியன் எனும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

மேலும், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பல முக்கிய நடிகர்கள் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. ராக் ஸ்டார் அனிருத் இப்படத்துக்கு இசை அமைத்து உள்ளார்.  

ரீலீஸ் மற்றும் உரிமம்: 

தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. மேலும், ஜெயிலர் படத்தில் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இண்டர் நேசனல் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. 

வெளியான மாஸ் அப்டேட்: 

ஜெயிலர் பட அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நேரத்தில், சன்பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில், நெல்சன், அவரது அலுவலகம் சென்று அவரிடம் முதல் சிங்கில் பாடல் கேட்பது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், நடிகை தமன்னா நடனமாடியுள்ள “காவாலா” என்ற பாடலின் சில நொடிகள் ஒலிக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.

கபாலி பட பாடலுக்கு பிறகு அருண்ராஜா காமராஜ் தலைவருக்கு பாடல் எழுதி உள்ளார். இந்த புரோமோ வீடியோ இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இப்பாடலுக்கு பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. வரும் 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Share this post with your friends