Mnadu News

“ஜெயிலர்” வசூல் மழை! கலாநிதி மாறன் ரஜினிக்கு தந்த தொகை எவ்வளவு தெரியுமா?

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷராப், தமன்னா, வசந்த ரவி, சுனில், ரெடின் கிங்ஸ்லி என ஒரு பெரும் நட்சத்திர படையே நடித்து 15 நாட்களுக்கு முன் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ரெகார்ட் ஐ உடைத்து நொறுக்கி உள்ளது “ஜெயிலர்” திரைப்படம். ஆம், இதுவரை சுமார் 630 கோடிகளை வாரிக் குவித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

பல வருடங்களாக இது போன்று இமாலய வெற்றியை ரஜினிகாந்த் கொடுக்காத நிலையில் அவர் அவ்வளவு தான், இனி அவரின் படங்கள் ஓடாது என கூறியவர்களுக்கு இது ஒரு நெத்தியடி பதிலாகவே பார்க்கப்படுகிறது. ஆம், ரஜனி அவர்களே இதை எதிர்பார்க்கவில்லையாம், அப்படி ஒரு அசுர வெற்றியை “ஜெயிலர்” படைத்து இன்னும் எனர்ஜியை ஏற்றி உள்ளது தலைவருக்கு.

மேலும், நெட் பிளிக்ஸ் ஓடிடி தளம் 100 கோடி கொடுத்து வாங்கி உள்ளார்கள் என தெரிய வந்துள்ளது. அதே போல ஹிந்தி சாட்டிலைட் உரிமை சுமார் 75 கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாம். ஓட்டுமொத்ததில் “ஜெயிலர்” படத்தின் மூலம் சன் பிக்சர்ஸ் ஒரு பக்கம் பெருத்த லாபத்தை பார்த்துள்ளது.

ஆனால், கலாநிதி மாறன் அவர்களின் நாணயத்தை இப்போது இணைய வாசிகள் பாராட்டி வருகின்றனர். ஆம், நேற்று ரஜினியை சந்தித்த கலாநிதி மாறன் 100 கோடிக்கான காசோலையை அவரிடம் கொடுத்து உள்ளார். இதன் மூலம் சூப்பர் ஸ்டாரின் சம்பளம் 110 கோடி + 100 கோடி பிராஃபிட் ஷேர் என 210 கோடிகளை “ஜெயிலர்” அவருக்கு அள்ளி கொடுத்துள்ளது. நேற்று நடந்த இந்த சந்திப்பு குறித்து சன் பிக்சர்ஸ் எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தமது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.  

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More