லியோ:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் பல நட்சத்திர ஸ்டார் நடிகர்கள் நடித்து பரபரப்பாக உருவாகி வருகிறது “லியோ”. இதுவரை விஜய் நடித்த படங்களை விட இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஷூட்டிங் மிக விரைவில் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமெடுக்க போகிறது. அக்டோபர் 19 திரை விருந்தாக லியோ வர உள்ளது.
ஜெயிலர்:
பீஸ்ட் பட தோல்விக்கு பிறகு நெல்சனும், கட்டாய மாஸ் வெற்றியை நோக்கி ரஜினியும் பணியாற்றி வரும் படம் “ஜெயிலர்”. எல்லா மொழி சூப்பர் ஸ்டார் நடிகர்களும் இப்படத்தில் நடித்து உள்ளதால் யார் யாருக்கு என்ன மாதிரி ரோல் என்ன மாதிரி கதை போன்ற பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் ஆழமாக எழுந்து உள்ளது. படத்தின் மொத்த ஷாடூங்கும் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமான முறையில் நடந்து வருகிறது. ஆகஸ்ட் 10 அன்று திரை அரங்குகளில் வெளியாக உள்ளதால், ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவை பிராண்டமாக நடத்த சன் பிக்சர்ஸ் முடிவு செய்து உள்ளது. படம் வெளியாக இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பர்க்கப்படுகிறது.
தளபதி விஜய் பங்கேற்கிறாரா?
சன் பிக்சர்ஸ் குழுவுக்கும் விஜய்க்கும் ஒரு நல்ல நட்பு அதோடு ரஜினியுடன் ஒரு நல்ல பாண்டிங் உள்ளதால், விஜய்யை சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு செய்துள்ளது படக்குழு. பெரும்பாலும் இது நடக்க வாய்ப்புள்ளது, அப்படி நடந்தால் இரண்டு சூப்பர் ஸ்டார்களையும் ஒரே மேடையில் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.