கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹81.09 ஆக இருந்தது.
இது நேற்று மீண்டும் 58 காசுகள் வீழ்ச்சியடைந்து டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ₹81.67 ஆக சரிந்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி ஆகும்.
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 4 நாட்களாக வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 9 காசுகள் அதிகரித்துள்ளது. இதன்மூலம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹ 81.58 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.