Mnadu News

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு.

காலிப்பணியிடங்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜீலை 24ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. குரூப் 4 தேர்வைத் தமிழ்நாடு முழுவதும் 18.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்நிலையில், குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்கள் அறிவித்த நிலையில் தற்போது 9,870 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி குறித்து ஜனவரி மாதத்தில் வெளியாக உள்ளன.
,பணியிடங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அதிகப்படியான தேர்வர்களுக்கு அரசுப் பணிக்கான வாய்ப்பு கிடைக்கப் பெறும். இதனால் கடந்த ஜீலை 24ம் தேதி தேர்வு எழுதிய தேர்வர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Share this post with your friends