திண்டுக்கல் பழனி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமண குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்: “தமிழகத்தில் 92 குரூப் 1 பணியிடங்களுக்கு முதல் நிலை தேர்வு நடைபெற்றது. அதில் நான் பங்கேற்றேன். உத்தேச வினா விடை குறித்து எனது ஆட்சேபனைக்கு வல்லுநர் குழு எந்த பதிலும் அளிக்காத நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. எனவே, 92 குரூப் 1 பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்க வேண்டும். வினா விடையை இறுதி செய்யும் வல்லுநர் குழுவை டிஎன்பிஎஸ்சிக்கு பதிலாக உயர் கல்வித்துறை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, மனு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More