Mnadu News

“டிஎஸ்பி” படத்தின் இசை & டிரெய்லர் இன்று மாலை வெளியீடு!

விஜய் சேதுபதி எப்போதுமே தனித்துவமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது ₹20 கோடிகள் சம்பளமாக பெறுகிறார். பொன்ராம் விஜய் சேதுபதி டி இமான் கூட்டணியில் உருவாகி உள்ளது “டிஎஸ்பி”.

சேதுபதி படத்துக்கு பிறகு காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், சிறப்பு தோற்றம், கேரக்டர் ஆர்டிஸ்ட் என எல்லா பக்கங்களிலும் சிக்சர் அடித்து வருகிறார்.

இப்படத்தின் முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி வைரல் ஹிட் ஆன நிலையில் இன்று மாலை படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு விழா சென்னையில் நடைபெற உள்ளது. டி இமான் நான்காவது முறையாக பொன்ராம் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார். யுகபாரதி, பொன்ராம், விஜய் முத்துப்பாண்டி ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.

பொன்ராம் டி இமான் யுகபாரதி கூட்டணியில் இதுவரை வெளியான பாடல்கள் எல்லாமே மாஸ் ஹிட் உள்ள நிலையில், இந்த படத்திலும் அந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share this post with your friends