வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என இரண்டு பிளாக் பஸ்டர் வெற்றிகளை கொடுத்தவர் இயக்குநர் பொன்ராம். ஆனால், இவர் இயக்ககத்தில் மூன்றாவது படமாக வெளியான சீமராஜா பெரும் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் அடுத்த படம் ஒரு பிரம்மாண்ட வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாகி உள்ளது விஜய் சேதுபதி 46.
ஒரு வருடத்துக்கு முன் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் நேற்று இப்படத்தின் பெயர் மற்றும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.
விஜய் சேதுபதி, அனு கீர்த்திவாஸ், புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி இமான் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். ஆக்சன் படமாக இது உருவாகி உள்ளது. “டிஎஸ்பி”அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.