முருகதாஸின் உதவி இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்குனராக அறிமுகமான படம் “டிமான்ட்டி காலனி” சிறு பட்ஜெட் படமாக 2015 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் படம் நல்ல வெற்றியை கண்டது.
ஏழு வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவு செய்து, அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குனராக உள்ள வெங்கி அருள்நிதியிடம் ஒரு கதையை கூற அது பிடித்து போக உடனடியாக ஷூட்டிங்கை துவங்க ஏற்பாடு செய்துள்ளார்.
“டிமான்ட்டி காலனி 2” என பெயரிடப்பட்டுள்ள இப்படம் அடுத்த மாதம் துவங்கப்பட உள்ளது என்பது உறுதி ஆகியுள்ளது. அருள்நிதிக்கு இந்த வருடமே மூன்று படங்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.