சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், தற்போது அவர் அடுத்தடுத்த நகர்வுகளை சரியாக எடுத்து வைத்து வருகிறார். நடிப்பது, பாடல் எழுதுவது, தயாரிப்பது என பல்வேறு கட்டங்களில் அவர் தன்னை நகர்த்தி கொண்டு செல்கிறார்.

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமன் இசையில் SK தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கும் “பிரின்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் SK வின் ஜோடியாக மரியா ரபோஷக்கா என்ற உக்ரைன் நாட்டு நடிகை நடிக்கிறார். அதே போல சத்யராஜ், பிரேம்ஜியும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

அண்மையில் வெளியான இந்த படத்தின் இரண்டு பாடல்களும் யூடியூபில் ஹிட் அடித்த நிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதன்படி, நாளை பிரின்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரெய்லர் ரீலீஸ் லிங்க் : https://youtu.be/Tg4jVoL2WqI