கொரோனா பெருந்தொற்று ஆரம்பம் ஆனதில் இருந்தே இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்தும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக பல பெரும் நிறுவனங்கள் பல ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இதனால் பல குடும்பங்களின் நிலை கேள்விக்குறியானது. பலர் தற்கொலை செய்து கொண்டும் உயிர் இழந்தனர்.
இந்த பணி நீக்க போக்கு நீங்கி விட்டதாக நாம் நினைத்து வரும் வேளையில், சமீபத்தில் இரண்டு பெரும் நிறுவனங்களான டிவிட்டர் மற்றும் மெட்டா பல ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக நீக்கி அதிர்ச்சி அளித்தது. இந்த போக்கை பலரும் எதிர்த்து வந்தனர்.
இந்த நிலையில் அதில் இன்னொரு மாபெரும் நிறுவனமான அமேசான் நிறுவனமும் பணி நீக்க அதிரடியில் இறங்கி உள்ளது. சுமார் 15 லட்சம் ஊழியர்கள் உலகமெங்கும் அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், 10 ஆயிரம் பேர் வரை தற்போது தங்கள் பணியை இழக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
குறிப்பாக, அலெக்ஸா, மனித வள பிரிவு, வணிகப் பிரிவு என இவற்றில் இருந்து தான் ஊழியர்களை நீக்க போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.