Mnadu News

டி 20 உலகக்கோப்பை போட்டிகள் நாளை துவக்கம்! இந்தியாவில் விளையாடும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள்!

எட்டாவது இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. ஏழு நகரங்களில் மொத்தம் பதினாறு அணிகள் பங்குபெறும் இந்த போட்டிகள் நவம்பர் 13 ஆம் தேதி வரை. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடும். அவற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்.

45 ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன.

இதில், இந்த டி 20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளது கொஞ்சம் அதிகமாக உள்ளது என இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்: ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பவுன்ஸ் இருக்கும் என்பதால் அங்குள்ள மைதானம் மிகவும் பெரிதாக இருக்கும், அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும் இதன் காரணமாக அவர்கள் அணிக்கு தேவை. ஆனால், மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது தேவையற்றது என கூறியுள்ளார்.

Share this post with your friends