Mnadu News

டி20 தொடர் தேதி மற்றும் வீரர்கள் அறிவிப்பு!

துளியும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத டி 20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் வருகின்ற 16 ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் நாடுகள் அறிவித்து உள்ளதோடு போட்டிகளில் பங்குபெற தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்த பின ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே வீரர்கள் அப்படியே இடம் பெற்றுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிகோலஸ் பூரன் தலைமை தாங்குகிறார்.

இதோ ஆஸ்திரேலியா அணி வீரர்கள் நிலவரம்:-
ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், சீன் அப்போட், கேமரூம் க்ரீன், டேனியல் சாம்ஸ், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ வேட், பேட் கம்மின்ஸ், டேவிட் மில்லர், டிம் டேவிட், மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஹேஸ்லேவுட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா

இதோ வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் நிலவரம்:-
யான்னிக் கேரியா, ஜேசன் ஹோல்டர், ரெய்மான் ரெய்பர், நிக்கோலஸ் பூரன், ஜான்சன் சார்லஸ், ஷெல்டன் காட்டெரல், அகெல் ஹோசன்,
ரோவ்மன் பவல், பிரண்டன் கிங், எவின் லீவிஸ், கைல் மேயர்ஸ், அல்சாரி ஜோசப், ஓபெட் மெக்காய், ஒடெய்ன் ஸ்மித்.

Share this post with your friends