Mnadu News

டீ மற்றும் கிரீன் டீயின் பயன்கள் பற்றி ஒரு சிறப்பு தொகுப்பு!

டீ மற்றும் அதன் வகைகள் :

உலகின் எல்லா மூலைகளிலும் ஒரு பானம் மிகவும் பிரபலம் அது தான் “டீ”. குறிப்பாக, டீ பிரியர்கள் அதிகம் உள்ள நாடு நமது இந்தியா. ஆனால், டீ அருந்தும் நபர்கள் ஒவ்வொருவரும் வித விதமான டீயை அருந்துவது உண்டு. இஞ்சி டீ, பிளாக் டீ, கிரீன் டீ, வெள்ளை டீ இப்படி பல வகைகள் உண்டு. இந்த கட்டுரையில் கிரீன் டீயின் பயன்கள் குறித்து காணலாம்.

கிரீன் டீயின் பிரத்யேக பயன்கள் :

கிரீன் டீயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்டுகள் உடலில் சேர்ந்திருக்கும் தேவையற்ற கலோரிகளை குறைக்க உதவுவதன் மூலம், உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், நல்ல மாற்றத்தை பார்க்க முடியும். அதே போல கிரீன் டீ குடித்தால் மட்டும் கொழுப்பு குறைந்து விடாது.

தினசரி உடற்பயிற்சி மற்றும் சரியான உணவுகளை பின்பற்றும்போது, கிரீன் டீயை எடுத்துக்கொண்டால் உங்களின் முயற்சிக்கு கூடுதல் பலன் கிடைக்கும், இதய ஆரோக்கியம், மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குவதிலும் கிரீன் டீக்கு தனி இடம் உண்டு. இதனை நாள்தோறும் குடிக்கும்போது தோல் அரிப்பு, தோல் சிவப்பு பிரச்சனைகள் குறையும் என ஆய்வுகள் கூறுகின்றன.

உடலின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு:

வெறும் வயிற்றில் கிரீன் டீயைக் குடிக்கும் போது, அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் காப்ஃபைன் உடலின் ஆற்றலை அதிகரித்து மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புச் செல்களை கரையச் செய்து, உடல் எடை குறைய வழிவகுக்கும். கிரீன் டீயை ஒருவர் தினமும் பருகி வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள் வாயை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு, வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும்.

இப்படி எண்ணற்ற வகையில் கிரீன் டீ ஒருவரின் உடலை இன்னும் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக மாற்றுவதில் சிறந்தது என பரவலான மருத்துவர்களின் கருத்தாகும்.

Share this post with your friends