Mnadu News

டுவிட்டர் ஊழியர்கள் விரைவில் அதிரடி நீக்கம்? உண்மையா?

டுவிட்டர் ஒப்பந்தம் விரைவில் நிறைவு பெற உள்ள நிலையில் அனைவரையும் அதிர செய்யும் வகையில் ஒரு முடிவை எலான் மஸ்க் எடுக்கப் போவதாக தகவல் பரவி உள்ளது.

அதாவது பணியாளர்களின் எண்ணிகையை 75 சதவீதம் அளவிற்கு குறைக்கவும் மூன்று ஆண்டுகளில் வருவாயை அதிகரிக்க முடிவு உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், தற்போது சுமார் 7500 ஊழியர்கள் டுவிட்டரில் பணிபுரிந்து வரும் நிலையில், அந்த எண்ணிக்கை 2000 ஆக குறைக்கப்படும் என்ற தகவல் பரவி உள்ளது.

இது குறித்து, டுவிட்டர் நிறுவனத்தின் பொது ஆலோசகர் சீன் எட்ஜெட் தங்கள் நிறுவன ஊழியர்களிடம் முன்பே இது குறித்து கூறியுள்ளார், “டுவிட்டர் ஒப்பந்தம் விரைவில் நிறைவு பெற உள்ள நிலையில், பல்வேறு வதந்திகள் பரவ கூடும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள மெமோவில் “டுவிட்டர் இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், வருவாயை அதிகரிப்பது தொடர்பான விவாதங்கள் நிறுத்தப்பட்டன. இணைப்பு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதால், ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து எதுவும் திட்டமிடப்படவில்லை” என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.

Share this post with your friends