Mnadu News

டெல்லியில் மீண்டும் மோசமடைந்து வரும் காற்றின் தரம்!

டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் மோசமான புகை மூட்டத்தால் மக்கள் சுவாசிக்க முடியாத நிலையில் இருந்தனர். டெல்லியில் காற்றின் தர குறியீடு 300 புள்ளிகளை தாண்டி இருந்தது. இது மிகவும் மோசமான பாதிப்பு ஆகும்.

இந்தநிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, தேசிய தலைநகரில் காற்றின் தரக் குறியீடு (310) ‘மிகவும் மோசமான’ பிரிவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரம் 50க்கு கீழ் இருந்தால் நல்லது. 51 முதல் 100 வரை இருந்தால் திருப்தி, 101 முதல் 200 க்கு இடையே இருந்தால் அது மிதமானது. 201 முதல் 300 இடையே இருந்தால் அது மோசமானது, 301 மற்றும் 400 இடையே இருந்தால் மிக மோசமானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Share this post with your friends