Mnadu News

டெல்லி பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வருகிற 1-ந் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரீய லோக்தளம் உள்பட 28 கட்சிகள் உள்ளன. இந்த 28 கட்சி தலைவர்களுக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக பிரதமர் வேட்பாளர் தேர்வு பற்றியும் கூட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 1-ம் தேதி (சனிக்கிழமை) காலை 7மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் முதல்-அமைச்சர் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஜூன் 2-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

Share this post with your friends