உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் 40 வயது பெண்ணை இரண்டு நாட்கள் தொடர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது.

டெல்லியை சேர்ந்த அந்த பெண் காசியாபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு பேருந்து நிலையத்தில் நின்று இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை காரில் கடத்தி சென்றுள்ளது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு பிறகு இரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளில் 4 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். எஞ்சிய ஒரு குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொடூர குற்றச்செயலில் ஈடுபட்ட 5 பேரும் அந்த பெண்ணுக்கு பழக்கம் உடையவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், அந்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கண்டனக் குரல்கள் நாடெங்கும் எழுந்து வருகின்றது.