Mnadu News

தகவல் தொழில்நுட்பத் துறையின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது: மத்தியமைச்சர் தகவல்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின்; பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய பின் பேசியுள்ள மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் இந்திய மென்பொருள் தயாரிப்புத் துறை வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதாவது 75 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதே நேரம், இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. அதோடு,இனி வரும் காலங்களில், வளர்ந்து வரும் அதிக திறன் கொண்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாகி உள்ளது. என்று பேசியுள்ளார்.

Share this post with your friends