மோடி சமூகத்தை அவதூறக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து, வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் தகுதிநீக்கத்துக்கு உள்ளானார். இந்நிலையில், தீர்ப்புக்கு எதிராக, அந்த ராகுல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த சூழ்நிலையில், 19 ஆண்டுகளாக ராகுல் காந்தி வசித்து வந்த டெல்லி துக்ளக்லேன் சாலையிலுள்ள அரசு பங்களாவை காலி செய்து அரசிடம் ராகுல் காந்தி ஒப்படைத்தார். அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி டெல்லி ஜன்பத் சாலையிலுள்ள சோனியா இல்லத்தில் வசிப்பார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More