பா.ரஞ்சித் – சீயான் விக்ரம் – ஸ்டுடியோ கிரீன் கூட்டணியில் உருவாகி வரும் படம் “தங்கலான்”. கே ஜி எஃப் சுரங்கத்தின் வரலாறை இப்படம் பேசுகிறது.
கடந்த மாதம் ஆரம்பமான இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை அடுத்த வருட ஏப்ரல் அல்லது மே மாதம் திரைக்கு கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.
இந்த நிலையில், தங்கலான் படத்தின் ஓடிடி வியாபாரம் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. அதில் பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று ₹35 கோடிகளுக்கு தற்போதே வாங்கி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.