Mnadu News

தடையைமீறி போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கைது.

சட்டப் பேரவையில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படலாம் என்ற சந்தேகத்தின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான காவல்துறையினர் வள்ளுவர் கோட்டம் முன்பு குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளூவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் பழனிசாமி, ஆதரவு எம்எல்ஏக்கள், அதிமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில்; ஈடுபட்டனர்.

அவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டபோதும் கலைந்து செல்லாததால் அவர்களை போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு கொண்டுச் சென்றனர்.

தடையை மீறி தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட பழனிசாமி உள்ளிட்டோரை கைது செய்யும்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Share this post with your friends