தனக்கு பழச்சாறில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாக நடிகரும், வேலூர் தொகுதி வேட்பாளருமான மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, இறுதி கட்ட பிரசாரம் செய்ய குடியாத்தம் வந்த போது நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகான் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குடியாத்தத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, வலுக்கட்டாயமாக தனக்கு கொடுத்த பழ சாறை குடித்த பிறகு, மயக்கம் நெஞ்சு வலி வந்ததாகவும், சிகிச்சை கொடுத்தும் வலி நிற்கவில்லை என்று தெரிவித்துள்ளார். சென்னைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்ட தனக்கு, விஷ முறிவு, நுரையீரல் வலி நீங்க சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தற்போது நலமாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.