Mnadu News

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். கட்டணம் உயர்வு.

தமிழகத்தில் 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3ஆயிரத்த 50 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதில், ஆயிரத்து 610 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. அதேபோன்று, 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 960 பி.டி.எஸ். இடங்களில் ஆயிரத்து 254 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ளவை நிர்வாக ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 4 லட்சம்ரூபாயிலிருந்து 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 12 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயில்; இருந்து 13 லட்சத்து 50ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கட்டணத்தைப் பொருத்தவரை 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில்; இருந்து 24 லட்சத்து 50ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கட்டணம் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாகவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 16லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகவும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு 29 லட்சத்து 40 ஆயிரம ;ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று, பல் மருத்துவப் படிப்புக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Share this post with your friends