இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு நாளுக்கு நாள் இடம்பெயர்ந்து வருவது தற்போது அதிகரித்து வருகிறது. அதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி பகுதிக்கு இலங்கையை சேர்ந்த 6 பேர் சென்றடைந்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பேட்டி
தென்காசி மாவட்டம் குண்டாறு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்...
Read More