Mnadu News

தனுஷ் படத்திற்க்கு பிறகு விஜய் சேதுபதி படத்திற்கு கிடைத்தது இதுதான்.

மறைந்த இளம் இயக்குநர் கொல்லாபுடி ஸ்ரீனிவாஸ் நினைவாக, அவரது குடும்பத்தினர் கடந்த 21 ஆண்டுகளாக சிறந்த அறிமுக இயக்குநர் விருதை வழங்கி வருகின்றனர். இந்த விருது கடந்த 2001ம் ஆண்டு சுவேதா, ரமேஷ் அரவிந்த் நடிப்பில் தமிழில் வெளியான ‘குட்டி’ பட இயக்குநர் ஜானகி விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டது.

 

 

இந்நிலையில் இந்த விருது ’96’ பட இயக்குநர் பிரேம் குமாருக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்பட இருக்கிறது. அறிமுக இயக்குனர் என்று சொல்லமுடியாத அளவிற்கு அனைவரது பாராட்டையும் பெற்று மிக பிரமாண்ட வெற்றி அடைந்தது .

 

மேலும் 96 பட இயக்குனருக்கு இந்த விருதுடன் ஒரு லட்சத்தி ஐம்பது ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்பட இருக்கிறது. இதனையடுத்து 19 வருடங்கள் கழித்து கொல்லாபுடி ஸ்ரீனிவாஸ் விருது பெறும் தமிழ்ப் படம் என்ற பெருமையைப் ’96’ திரைப்படம் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends