Mnadu News

தன் பிறந்த நாளுக்காக கார் டிரைவருக்கு பரிசுக் கொடுத்த அலியா பாட்

அலியா பட் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார். இப்போது பிரம்மாஸ்திரா படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்குவில் ராஜமௌலி இயக்கும் RRR படத்திலும் சஞ்சய் லீலா பன்சாலி சல்மான்கானை வைத்து இயக்கும் இன்ஸா அல்லா படத்திலும் கதாநாயகியாக கமிட் ஆகி உள்ளார்.

பிஸியாக இருக்கும் அலியா பட் இப்போது தனது பிறந்தநாளுக்காக செய்த காரியம் அனைவரையும் வியக்க வைத்து உள்ளது. சமீபத்தில் தனது பிறந்தநாளை தனது நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார் .

தனது பிறந்த நாளுக்கு முன்னர் தன்னிடம் நீண்டகாலமாக கார் ஓட்டுநராக இருந்து வரும் சுனில் மற்றும் தனது உதவியாளர் அன்மோல் ஆகியோருக்கு 50 லட்சம் வீடு கட்டிக்கொள்வதற்காக விலகி உள்ளார் .இது அவர்களின் விசுவாசத்திற்கு கொடுக்கும் பரிசு எனவும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயலை ரசிகர்களும் , பலரும் பாராட்டி வருகின்றனர்

Share this post with your friends