Mnadu News

தபால் ஓட்டு செலுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவுதான் இது..

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறவுள்ளது. அந்தவகையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85-வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீட்டில் இருந்து தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏதுவாக 12டி படிவம் வினியோகம் செய்யும் பணி கடந்த 20-ந்தேதி தொடங்கியது. 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வந்தனர். இந்த பணிக்காக சென்னை மாவட்டத்தில் 4, 676 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில்,நேற்று வரையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 85-வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு 45 ஆயிரத்து 716 விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட்டு, 4 ஆயிரத்து 236 பேரிடம் இருந்து விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ளது. இதேபோல, மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு 9 ஆயிரத்து 639 விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட்டு, 794 பேரிடம் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ளது.

இதுவரையில், மொத்தம் 55 ஆயிரத்து 355 படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், 5 ஆயிரத்து 30 படிவங்கள் மட்டுமே பெறப்பட்டு உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த படிவம் கொடுப்பதற்கும், நிரப்பிய படிவத்தை சமர்பிப்பதற்கு இன்று கடைசி நாள் ஆகும்.

Share this post with your friends

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

குவைத் தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

Read More