Mnadu News

தமிழகத்தில் பி.எட் கலந்தாய்வு தொடங்கியது.

தமிழகத்தில் பி.எட் கலந்தாய்வை தொடங்கி வைத்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகள் என மொத்தம் 21 கல்லூரிகளில் 2 ஆயிரத்து 40 பி.எட் படிப்புக்கான இடங்கள் உள்ளது என்றார். இந்த ஆண்டு இப் படிப்பிற்;;கு 5 ஆயிரத்து 138 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்ற அவர்,வரும் 2023 ஆம் ஆண்டு முதல் பி.எட் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று கூறினார். வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி; அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு பணியிட மாற்ற கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் கூறினார். முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடை பெறுகிறது.அதைத் தொடர்ந்து வரும்; 5 நாட்களுக்கு பிற பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

Share this post with your friends