தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கு 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று காலை முதல் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த தொகுதிக்குள்பட்ட தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.
பதற்றமான வாக்குச் சாவடியாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.