மழைத் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகள் மற்றும் வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கும், தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
நாளை 15 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 18 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More