சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1130 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- முகூர்த்த தினமான இன்று மற்றும் வார விடுமுறை நாளான நாளை சனிக்கிழமை (2-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை (3-ந்தேதி) ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.