சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் 5 நாள்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.அதோடு, வரும் 31 மற்றும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி; மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More