Mnadu News

தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் போனஸ் அறிவிப்பு.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருநாளையொட்டி தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டு தீபாவளி வருகிற 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 சதவிகிதம் தீபாவளி போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசின் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8 புள்ளி 33 சதவிகிதம் போனஸ் மற்றும் 1 புள்ளி 67 சதவிகிதம் கருணைத் தொகை என மொத்தம் 10 சதவிகிதம் போனஸ் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends