தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டம் செயலாக்கம் குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சென்னை கலைவாணர் அரங்கத்தில், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை; சந்தித்துப் பேசினார். பின்னர் மத்திய அமைச்சரின் தலைமையில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் உயிர் நீர் இயக்க திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு., ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் வினி மகாஜன்., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா , நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா , ஜல் ஜீவன் திட்டத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் திட்ட இயக்குநர் விகாஸ் ஷீல் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது , தமிழ்நாடு உயிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More