Mnadu News

தமிழக முழுவதும் பால் நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு;

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் பெரியண்ணன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து மாநிலத் தலைவர் ராஜேந்திரன் செய்தியாளிடம் கூறும் போது, பால் கொள்முதல் பசும்பாலுக்கு 42 பாயும் எருமை பாலுக்கு 51 ரூபாயும் உயர்த்தி வழங்கிட வேண்டும், கூட்டுறவு சங்க பணியாளர்களை பணிவரன் முறை படுத்த வேண்டும், அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து கால்நடைகளுக்கும் இலவச காப்பீடு வழங்க வேண்டும், 50% மானிய விலையில் கால்நடைகளுக்கு அடர் தீவனம் வழங்க வேண்டும், பால் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்க்கு உரிய முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர் தனியார் நிறுவனம் அதிக விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றனர். அதனை வரைமுறைப்படுத்தி தனியார் பால் விற்பனை விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

தற்போது சேலத்தில் நடைபெற்று வரும் இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நடைபெற்று உள்ளது. வருகின்ற 26 ஆம் தேதிக்குள் எங்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு பரிசீலனை செய்யாவிட்டால் அடுத்த கட்டமாக திட்டமிட்டபடி தமிழக முழுவதும் வருகின்ற 28ஆம் தேதி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

Share this post with your friends