தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குசுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று முதல் 22 வரை 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதைபோல இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More