விக்னேஷ் சிவன்:
சிம்பு நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடி தான்’ படத்தை இயக்கி இன்னும் ரீச் ஆனார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

புதிய கூட்டணி :
விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படத்தில் “லவ் டுடே” படத்தின் மூலம் வைரல் ரீச்சான இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இப்படம் சயின்ஸ் ஃபிக்சன் ரொமாண்டிக் காமெடியாக உருவாகவுள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது.

மேலும் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்க அனிருத் இசையில் உருவாகும் எனவும் தன்னுடைய காதலுக்காக மொபைல் ஃபோன் மூலம் டைம் டிராவல் செய்யும் இளைஞனை மையப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஶ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் அறிமுகம் :
இந்நிலையில், இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகம் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.