Mnadu News

“தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்” – ப.சிதம்பரம்

மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் , அனைத்து மாநிலங்கள் குறித்தும் என்னால் உதியாக கூற முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

கேரளாவில் 20 தொகுதிகளையும் ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி பகிர்ந்து கொள்ளும். அங்கு பா.ஜனதாவுக்கு எதுவும் கிடைக்காது. என்று தெரிவித்த ப.சிதம்பரம், கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசுகளுக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது. இந்த மாநிலங்களில் 2019-ம் ஆண்டு தேர்தலில் கிடைத்ததை விட அதிக இடங்கள் காங்கிரசுக்கு இந்த முறை கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தேர்தலுக்காகவும், அரசியலுக்காகவுமே கச்சத்தீவு பிரச்சினையை பிரதமர் கையில் எடுத்துள்ளார் என்று கண்டனம் தெரிவித்த ப சிதம்பரம், சீன ஆக்கிரமிப்பில் இருந்து மக்களை திசை திருப்பவே இந்த பிரச்சினையை அவர் கையில் எடுத்து உள்ளார்” என்று விமர்சித்துள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More