Mnadu News

தமிழ் வழியில் மருத்துவம் படிக்க அரசு நடவடிக்கை;

புதுச்சேரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கெளரவிக்கும் விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு மூத்த குடிமக்களை கெளரவித்தனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவித்த தமிழிசை செளந்தரராஜன்,

புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் தமிழ்வழியில் மருத்துவப்படிப்பு ஏற்படுத்தி தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், விருப்பப்பட்டவர்கள் தமிழில் மருத்துவம் படிக்கலாம் என்றும் இதற்காக மருத்துவப்படிப்பு புத்தகங்களை தமிழில் அச்சடிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.

கர்நாடகாவில் கனமழை காரணமாக புதுச்சேரிக்கு பால்வரத்து குறைந்ததால் சிறிது தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது அதை சரிசெய்ய தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தனது தந்தையை தெலுங்கானாவில் தன்னுடைய பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் வைத்துள்ளதாகவும் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More