Mnadu News

தலித்துகளை பலிகடாவாக்கும் காங்கிரஸ்: மாயாவதி குற்றச்சாட்டு.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் பெரும்பாலான வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதேசமயம் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்தத் தேர்தலை விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலித் தலைவர்களை பலி ஆடுகளாக பயன்படுத்துவதாக உத்தரப்பிரதேச முன்னாள் முதல் அமைச்சரும் , பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில்,வெளியிட்டுள்ள பதிவில், “பாபாசாகேப் அம்பேத்கரையும் அவரது சமூகத்தின் பங்களிப்பையும் மதிக்காமல் தொடர்ந்து தவிர்த்து வந்ததை காங்கிரஸ் கட்சியின் வரலாறே நமக்கு சாட்சியாக தெரிவிக்கிறது. காங்கிரஸ் கட்சி அதன் வெற்றிகரமான காலங்களில் தலித் மக்களின் பாதுகாப்பையும், அவர்களுக்கான மரியாதையையும் குறித்து கவலை கொண்டதில்லை. மாறாக அதன் மோசமான நாள்களில் தலித் மக்களை பலி ஆடுகளாகப் பயன்படுத்து வருகிறது” என பதிவிட்டு விமர்சித்துள்ளார்.
அதோடு அவர், காங்கிரஸ் கட்சி தனக்கு சாதகமான காலங்களில் தலித் அல்லாதவர்களை முன்னிறுத்தியும், மோசமான காலங்களில் தலித் மக்களை முன்னிறுத்தியும் அரசியல் செய்வதாகக் குறிப்பிட்டுள்ள மாயாவதி உண்மையாலும் இது தலித் மக்களின் மீதான பாசம்தானா? என மக்கள் கேள்வி எழுப்பி வருவதாக தெரிவித்துள்ளார்.

Share this post with your friends