Mnadu News

தலைநகர் சென்னையில் அதிகரிக்கும் போதை புழக்கம்! மூவர் கைது! கண்டுகொள்ளுமா தமிழக அரசு! 

தமிழகத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. காவல்துறையும் பல்வேறு வகைகளில் இதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தலைநகர் சென்னையின் முக்கிய பகுதியில் ஒரு கும்பல் சிக்கி உள்ளது. 

ஆம், பல்லாவரம், குரோம்பேட்டை, செம்மஞ்சேரி போன்ற பகுதிகளில் விற்பனை செய்ய வைத்திருந்த சுமார் 750 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். அவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நேற்று, குரோம்பேட்டை மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அந்த பகுதியில் சுற்றி வந்த மூன்று வாலிபர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் எழவே, அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் ஒரு பை சிக்கியது. அதில் சுமார் 750 போதை மாத்திரைகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர்கள் மூவரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் ராஜா ஜெகதீஷ், கார்த்திக் என்பது தெரியவந்தது.

பின்னர், இவர்களுக்கு போதை மாத்திரைகள் எங்கிருந்து வருகிறது? இவர்களின் தலைவன் யார்? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை துவக்கி உள்ளனர். 

Share this post with your friends