“மாமன்னன்” திரைபடத்துக்கு முன் பின் என சொல்லும் அளவுக்கு பகத் பாசில் மார்க்கெட் மற்றும் இன்னும் ஒரு படி மேலே சென்றுள்ளது என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு மக்கள் அவரை கொண்டாடி தீர்த்துள்ளனர். ரத்தினவேலு என்கிற நெகட்டிவ் ரோலில் பின்னி பிடல் எடுத்து உள்ளார் பகத். தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள அவருக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
ஆம், அப்படி ஒரு வாய்ப்பு அவரின் கதவை தட்டி உள்ளது, அதுவும் பெரும்பாலும் உறுதியாகி உள்ளது, அது என்னவென்றால் தலைவர் 170 படத்தில் பகத் பாசில் தான் முக்கிய நெகட்டிவ் ரோல் ஒன்றை ஏற்று நடிக்க உள்ளார் என்பதே. “ஜெய் பீம்” படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்த இயக்குனர் தா.சே. ஞானவேல். சமரசமில்லாத, அழுத்தமான திரைக்கதை, வசனங்கள் கொண்டு படத்தை செதுக்கி இருப்பார்.
இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு ஒரு கதையை கூறவே, அது ரஜினி அவர்களுக்கு தான் வயதுக்கு ஏற்ற ரோல் என்று எண்ணி இந்த கதையை ஓகே செய்துள்ளார். மேலும், இதை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ரஜினியின் 170 படமான இது சரியாக வர வேண்டும் என்பதில் மிக தீவிரமக உள்ளார் சூப்பர் ஸ்டார். இதனால் கதைக்கு யார் தேவையோ அவர்களை தேர்வு செய்து நடிக்க வையுங்கள் என கூறி உள்ளாராம்.
முதலில் நடிகர் விக்ரம் மிடம் இது குறித்து பேச்சுவார்தை நடத்திய படக்குழு, அவர் ஓகே சொல்லாததால் வேறு பல நடிகர்களை அணுகி வந்தனர். ஆனால், இறுதியாக மாமன்னன் படத்தில் நடித்த பகத் பாசில் நடிப்பு பெரிய அளவில் பேசப்படவே அவரை அணுகி உள்ளனர். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படம் அடுத்த வருட பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டுக்கு கொண்டு வர லைக்கா திட்டமிட்டு உள்ளது.