நடிகர் ரஜினிகாந்த் தற்போது “ஜெயிலர்” படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் இப்படம் உருவாகி வருகிறது. கோலமாவு கோகிலா படத்தின் அதே குழு இதுவரை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்துக்கு பிறகு ரஜினி லைக்கா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க உள்ளார். இதில் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் ஒரு படமும், சிபி சக்கரவர்த்தி இன்னொரு படத்தையும் இயக்க உள்ளனர்.
இதில் தலைவர் 170 படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார். இதற்கான பூஜை வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போது இதற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இதில் நடிகர் வடிவேலு மற்றும் அரவிந்த்சாமி ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.