Mnadu News

தலை மேல் தேங்காய்கள் உடைத்து பக்தர்கள் நூதன வழிபாடு;

கிருஷ்ணகிரி;

ஓசூர் அருகே உள்ள இடையநல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சம்பன்னி பீரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் புரணமைக்கப்பட்டு தற்போது புதிய கோயிலாக கட்டப்பட்டுள்ளது. புதிய கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து திருவிழாவின் ஒரு பகுதியாக தலை மேல் தேங்காய்கள் உடைக்கும் வழிபாடுகள் நடைபெற்றது.

முன்னதாக கோயில் வளாகத்தில், சம்பன்னி பீரேஸ்வரர், ஈரம்மா, ராமாதேவரு, வீரபத்திர சுவாமி, சிக்கம்மா, தொட்டம்மா உள்ளிட்ட பல்வேறு கிராம தெய்வங்கள் மேளதளங்கள் முழங்க தலைமையில் சுமந்தபடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலை மேல் தேங்காய் உடைக்கும் இடத்தில் அனைத்து கிராம தேவதைகளும் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து வீர மக்கள் நடனமாடி தலைமேல் தேங்காய்கள் உடைக்கும் நூதன வழிபாடு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது தலைமேல் தேங்காய்களை உடைத்து வழிபாடுகளை நடத்தினர். இந்த திருவிழாவில் ஓசூர் தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், பெங்களூரு, சர்ஜாபுரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.து கொண்டனர்.

Share this post with your friends