துணிவு திரைப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. 1990 களில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற வங்கி கொள்ளையை மையமாக கொண்டு படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் ரசிகர்களை குஷிப்படுத்த வரும் நிலையில், படம் பொங்கல் பண்டிகைக்கு விஜய் படத்துடன் மோத உள்ளது. துணிவு படத்தின் முதல் சிங்கிள் அல்லது டீஸர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் துணிவு ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், அஜித் காரவனில் இருந்து வெளியே வந்து காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அஜித் ரசிகர்களை பார்த்து கை அசைக்கும் வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.