அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், தற்போது அஜித் தமது அடுத்த படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
அதன் பிறகு உலக டூர் பைக்கில் செல்ல உள்ளார் அஜித் இதன் பிறகு தான் பெரிய ஆட்டம் ஆரம்பமாக உள்ளது.
அதாவது, அஜித் ஒரு பக்கா பிளான் போட்டுள்ளராம். லைக்கா நிறுவனம் தல 62 படத்தை தயாரிக்கிறது. அதோடு இன்னும் மூன்று படங்கள் மூன்று முக்கிய இயகுனர்களோடு அஜித் இணைந்து பணியாற்ற உள்ளராம். அதற்காக அஜித்துக்கு மாபெரும் சம்பளம் பேசப்பட்டு உள்ளது என தகவல் கசிந்துள்ளது.
அதே போல இரண்டு படங்கள் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும், மங்காத்தா 2 கிளவுட் நைன் தயாநிதி அழகிரி தயாரிப்பில் நடிக்க உள்ளாராம்.
இந்த செய்தியால் தல ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய உற்சாகம் எழுந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.